Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வலிவலம், கொடியாலத்தூர் அடிக்கடி மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

கீழ்வேளூர், ஜூன் 18: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் பகுதிகளில் நீடித்து வரும் மின்தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, வலிவலம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து திருக்குவளையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.