கொள்ளிடம், செப்.17: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மாதிரவேளூருக்கும், நளன்புத்தூருக்கும் இடையே தரையணை அமைக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிறது. கடல் நீர் தொடர்ந்து உள்புகாதவாறு பொறியாளர்கள் தரை அணையை அமைக்க முடிவு செய்து அமைத்தனர். இதன்படி 8 அடி அகலம் மற்றும் 8 ஆழத்திற்கு மணலை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பாறாங்கற்களை போட்டு தரையோடு தரையாக சரி செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள அணையே தரைகீழணை அணையாகும். இதன் மூலம் கடலிலிருந்து வேகமாக ஆற்றுக்குள் செல்லும் உப்புநீர் தடுத்து உட்புகாதவாறு தடுத்து நிறுத்தப்படுமட். மேலும் ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்பாக அமையும். இரண்டடி உயரத்திற்கு ஆற்றில் எந்த நேரமும் தண்ணீர் தேங்கி இருந்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர் நன்னீராக மாறி உப்பு நீர் புகுவது தடுக்கப்படும். எனவே தரை கீழ் அணையை ஒட்டி மாதிரவேளூருக்கும், நளன்புத்தூருக்கும் இடையே கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்றின் கரையோர விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


