Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அக்.31ம் தேதிக்குள் தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்று பெற வேண்டும்

நாகப்பட்டினம், செப்.17: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்ச் 2019 முதல் ஜீன் 2023 வரையிலான மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் புத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதி க்குள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

மார்ச் 2019 முதல் ஜீன் 2023 வரையிலான மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் அனைத்து பருவங்களுக்குரிய உரிமைக்கோரப்படாத தனித்தேர்வர்களது மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாள்களாக மாற்றிடும் பொருட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதி க்குள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை நாகப்பட்டினம் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், ஜீன் 2023 பருவத்திற்கு பின் தேர்வெழுதிய பருவங்களுக்கான தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.