கிராம மக்கள் அச்சம் 3700 மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ரூ.40 கோடியில் வேளாங்கண்ணி செருதூரில் பாதுகாப்பு தடுப்பு சுவர்
நாகப்பட்டினம், ஆக. 17: வேளாங்கண்ணி கடற்கரையில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் செருதூரில் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் கரை பாதுகாப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். 150 மீன்பிடி படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொடர்ச்சியான கடற்கரை அரிப்பு காரணமாக படகுகள் நிறுத்தும் பகுதிகள் பாதிக்கப்பட்டு, படகுகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



