நாகப்பட்டினம், ஆக. 17: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் அமைப்பு கூட்டம் ஓய்வூதியர் அலுவலக சங்க கட்டிடத்தில் நடந்தது.சங்க நிர்வாகி வீரசெல்வம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் செந்தில்குமார், கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது சுகாதாரத்துறை தினசரி அறிக்கை பதிவிட இணைய வழி சேவையை ஏற்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நீர்வளத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



