Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொள்ளிடம் அருகே ஆட்டை கபளிகரம் செய்து குளத்தில் திரியும் முதலை

கொள்ளிடம், ஆக. 17: கொள்ளிடம் அருகே மேனாயிருப்பு கிராமத்தில் குளத்தில் திரியும் முதலையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியை சேர்ந்த மேனாயிருப்பு கிராமத்தில் பொதுக்குளம் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள இந்த குளத்தில் இன்னும் தண்ணீர் வற்றாமல் இருந்து வருகிறது.இதில் ஒரு முதலையும் திரிந்து வருகிறது.

சென்ற வாரம் இந்த குளத்து கரையை ஒட்டி நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டை இந்த முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. காலை வேளையில் தண்ணீரை விட்டு வெளியே வரும் முதலை கரையோரத்தில் உணவுக்காக சுற்றி திரிந்து, பின்னர் ஓய்வெடுத்து, அதன் பிறகு மீண்டும் குளத்துக்குள் சென்றுவிடுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த குளத்தில் இறங்குவதற்கு அங்குள்ளவர்கள் பயந்து வருகின்றனர்.