Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேதாரண்யம் அருகே அவ்வையார் மணிமண்டபம் பணி: ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு ஆய்வு

வேதாரண்யம், ஜூன் 15: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாபட்டினம் கிராமத்தில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா துளசியாபட்டினம் கிராமத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணிகள் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டி தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இதனை வேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது ஒப்பந்ததாரர்களிடம் அவ்வையார் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.ஒன்றிய செயலாளர் சுப்பையன், மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் பிரின்ஸ் கோபால் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.