Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு

நாகப்பட்டினம், ஜூன் 15: முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வரும் ஜூரவ 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.