வேதாரண்யம், ஆக. 14: வேதாரண்யம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் இராஜகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச் செயலர் மாரிமுத்து வரவேற்றார். செயலர் திருமாறன், பொருளர் அழகிரி, முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஓய்வூதியருக்கு அரசே சுகாதார இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படவேண்டும். அகஸ்தியம் பள்ளி, திருவாரூர், சென்னை ரயில் இயக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் சித்திரவேல் குணசேகரன் நாகராசன் இலஏகாம்பரம் மகாளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் துணைத் தலைவர் செல்வராசு நன்றி கூறினார்
+
Advertisement



