Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வியட்நாம் படகு விபத்து சம்பவம்; சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறை மேலும் வலுப்படுத்த வேண்டும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

நாகப்பட்டினம், ஜூலை13: வியட்நாம் படகு விபத்து போல் எதிர் காலங்களில் நடைபெறாமல் இருக்க கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வியட்நாமின் பு குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்ததுள்ளனர். பலர் காயமடைந்ததும் உள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மகிழ்ச்சியான சுற்றுலா பயணமாக தொடங்கிய பயணம் ஒரு சில நிமிடங்களில் துயர நிகழ்வாக மாறியிருப்பது மனதை உலுக்கும் சம்பவமாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இந்த பேரிழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை வழங்கிடவும் பிரார்த்திக்கிறேன். இந்த விபத்தில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் மற்றும் ஒன்றிய அரசு விரைவாகவும் முழுமையாகவும் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த விபத்திற்கான காரணங்கள் குறித்து வியட்நாம் அரசு விரிவான விசாரணை நடத்தி எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.