Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போக்குவரத்து பாதிப்பு; நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கம் குறித்து புகார் அளிக்கலாம்

நாகப்பட்டினம், ஆக. 12: நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கம் குறித்த புகார் அளிக்கலாம். புகார் அளித்தவர் விவரங்கள் ரகசியம காக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முதல்வர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடந்தது. இதன் நிகழ்ச்சி நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கலெக்டர் பிரவீன்குமார் கலந்து கொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மாநிலத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல்வர் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் பயன்பாடு என்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய எதிரி. சமுதாயத்தின் எதிரியாக இருக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ்நாடு அரசின் பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக போதை பொருள் தடுப்பு கைப்பேசி செயலியை கொண்டு வந்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை கண்டறிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். போதை பொருள் தடுப்பு கைப்பேசி செயலியை உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு.

அதில் போதைப் பொருட்கள் புழக்கம் குறித்த தகவல்களை அளித்தால், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இத்தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும் போதைப் பொருட்கள் புழக்கம் குறித்த தகவல் அளிக்கும் நபர்கள் குறித்த விபரங்கள் ரகசியம் காக்கப்படும். பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். போதைப் பொருள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 10581-ல் புகாரளிக்கலாம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு அமைப்புகளை உருவாக்கி உள்ளோம். இந்த அமைப்புகள் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் தலைமுறையினருக்கு நல்ல சமுதாயத்தை வழங்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தை போதைப் பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து, நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி மைதானத்தில் போதையில்லா தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வாசகத்தை கல்லூரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலியாக இணைந்து காட்சிப்படுத்திய நிகழ்வில் கலெக்டர் பிரவீன்குமார், எஸ்பி கேழ்கர் சுப்பிரமண்ய பாலசந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில், மாவட்ட எஸ்பி கேழ்கர் சுப்பிரமண்ய பாலசந்திரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலமுருகன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், உதவி ஆணையர் (கலால்) அர்ச்சனா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் நாநிலதாசன், கல்லூரி மாணவர்கள், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.