நாகப்பட்டினம்,ஆக.10: நாகப்பட்டினம் அருகே மயில் தோகை விரித்தாடியதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாகப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் மயில்கள் அதிகமாக காணப்படுகின்றது. இந்த மயில்கள் அவ்வபோது இரை தேடி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில் பூவைத்தேடி கிராமத்தில் சாமிநாதனுக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மயில் இரை தேடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென மழை வருவது போல கருமேகங்கள் சூழ்ந்தது. அப்போது அங்கு இரை தேடிய மயில் தோகையை விரித்து ஆடத் தொடங்கியது. தோகை விரித்து ஆடிய மயிலை அப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



