நாகப்பட்டினம், ஆக. 10: நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையம் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. டிஎஸ்பி குணசேகரன் பேரணியை தொடங்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி புதிய பஸ்ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி சாலை, அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக மீண்டும் காவல் நிலையத்தை வந்தடைந்தது. இதில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், போதை பொருள் விற்பனை செய்வதை தடுப்பது ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்களை பிரச்சாரம் செய்த வண்ணம் சென்றனர். சப் இன்ஸ்பெக்டர் இரணியன் நன்றி கூறினார்.




