நாகப்பட்டினம், ஆக. 10: வேளாங்கண்ணி அருகே ஒரத்தூர் தெற்கு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று நாகப்பட்டினம் வேளாங்கண்ணி சாலை ஒரத்தூர் ரவுண்டானாவில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
+
Advertisement



