Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

நாகப்பட்டினம், செப்.8: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 309 மனுக்கள் குவிந்தன. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் நடந்தது. இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 309 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.20 ஆயிரம் எழுத்து பெருக்கி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.11 ஆயிரத்து 445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31 ஆயிரத்து 445 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரவீன்குமார் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை) கண்ணன் கருப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரங்கநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமலிங்கம், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், நாகப்பட்டினம் ஆர்டிஓ சங்கரநாராயணன் , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.