Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செம்பனார்கோவிலில் கலைஞர் 8ம் ஆண்டு நினைவுநாள்

செம்பனார்கோவில், ஆக.8: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு செம்பை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் முன்னிலையில் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள பெரியார் சிலை முன்பிலிருந்து தொடங்கி பரசலூர், மேலமுக்கூட்டில் உள்ள அண்ணா சிலை வரை பேரணியாக வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வடக்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தர், முன்னாள் எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினர் விஜயபாலன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கௌதம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.