நாகப்பட்டினம், ஆக. 8: நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கை விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து நியாயவிலைக்ககடைகளிலும் இன்று (8ம் தேதி) மற்றும் நாளை (9ம் தேதி)ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கைவிரல்ரேகை பதிவ அல்லதுகண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் இ கேஒய்சி பதிவு செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக்கடையில் கைவிரல் ரேகையினை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் கைவிரல்ரேகை பதிவு செய்யாமல் பணிநிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு சென்று இந்த முகாமில் பதிவு செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.



