நாகப்பட்டினம், ஆக.8: நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு செல்வம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரபோஜி, தலைவர் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தொழிலாளர் விரோத சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும். மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களுடன் நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி திடலில் இருந்து பேரணி புறப்பட்டது. அண்ணாசிலை, ஆஸ்பத்திரி சாலை வழியாக பேரணி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. அங்கு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.



