Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தோப்புத்துறையில் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி

வேதாரண்யம், ஜூன் 7: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இட நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் மாணவ மாணவிகள். நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில்அமைந்துள்ளது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவ, மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. இப்பள்ளியில் சென்ற ஆண்டு வரை 709 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இந்த ஆண்டு பள்ளி திறந்த அன்று ஒரே நாளில் 301 மாணவ, மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர். மேலும் தொடர்ச்சியாக இப்பள்ளியில் 99 %மற்றும் 100% தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் இன்ஜினியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.இதன் காரணமாக சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இப்பள்ளியில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர்.

கடந்த பல ஆண்டாக வகுப்பறை பற்றாக்குறையால் தகரக் கொட்டகை மற்றும் மரத்தடியில் மாணவ -மாணவிகள் பயின்று வந்தனர். சென்ற ஆண்டு ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது உள்ள நிலையில் இப்பள்ளியில் 37 வகுப்பறைகள் இருக்க வேண்டும். ஆனால் 25 வகுப்பறை மட்டுமே உள்ளது. மேலும் ஆய்வகம் உட்பட 12 வகுப்பறைகள் இப்பள்ளிக்கு தேவையாக உள்ளது. ஆய்வகம் இல்லாமல் ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை பற்றாக்குறை, சைக்கிள் நிறுத்த சைக்கிள் ஷெட் இல்லாமல் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இது பள்ளிக்கு அடிப்படை தேவைகளை பூர் த்தி செய்து கொடுக்க வேண்டுமென பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவ, மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.