Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுவை விட அதிக போதை தருவதால் கொள்ளிடம் கடலோர பகுதியில் சாராயம் அமோகமாக விற்பனை

கொள்ளிடம், செப். 7: கொள்ளிடம் அருகே கடலோர பகுதியில் சாராய விற்பனை அமோகமாக விற்பனையாவதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் அரசின் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இங்குள்ள அனைத்து கடைகளிலும் தினந்தோறும் மது பாட்டில்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆனால் மற்றொருபுறம் சாராய விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம், தற்காஸ், வேட்டங்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பாண்டிச்சேரியில் இருந்து விதிக்கு புறம்பாக கடத்திவரப்பட்டு அவைகள் மிக குறைந்த விலைக்கு எடுத்துவரப்பட்டு, மூன்று மடங்கு விலை அதிகப்படுத்தி ஒரு குவாட்டர் பாட்டில் ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சாராயம் ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.25 முதல் 50 வரை வீதம் வாங்கி அதிக விலை கொடுத்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர். தினந்தோறும் அரசு மதுபான கடைகள் பகல் 12 மணி அளவில் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. காலை 12 மணிக்குள்ளாக இந்த பாண்டிச்சேரி மலிவு விலை சாராய பாட்டில்கள் விதிக்கு புறம்பாக அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சாராய பாட்டில்களுக்கு அங்குள்ள குடிமகன்களிடையே ஏகப்பட்ட கிராக்கி இருப்பதால் விற்பனை நாள்தோறும் அமோகமாக நடக்கிறது. இதனை பருகுவதன் மூலம் உடனடியாக அதிக போதையை ஏற்படுவதாக குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த சாரயம் தொடர்ந்து உட்கொண்டால் உடல் வலி, கை கால் வலி,மூட்டு வலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் அதே குடிமகன்கள் வருத்தத்துடன்(?) தெரிவிக்கின்றனர். எனவே கொள்ளிடம் அருகே கடலோரப் பகுதிகளில் விதிக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டு வரும் சாராயத்தை விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.