Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கீழ்வேளூர், ஆக. 7: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பிரதமாராமபுரத்தில் இயங்கி வரும் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார அலுவலர் நேர்முக உதவியாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மையத்தின் நிறுவனர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.  திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் சேஷாத் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் வினோத் கிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். இதில் திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் , குணசீலன் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.