Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேதாரண்யம் அருகே டூ வீலர்கள் மோதல் விவசாயி பலி

வேதாரணயம். ஜூன் 6: வேதாரண்யம் அருகே இரண்டு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் லேசான காயமடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தென்னடாரை சேர்ந்தவர் மாரியப்பன் (39). விவசாயி. இவரது மனைவி சுவேதா (26). இவர்கள் இருவரும் தங்களது இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பஞ்சநதிக்குளத்தில் உள்ள தனது உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர்.

பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஓஎன்ஜிசி சாலை அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே அதே ஊரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் (29) என்பவர் மாரியப்பன் இருசக்கர வாகனத்தில் மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார். மனைவி மற்றும் 2 குழந்தைகள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர். வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.