மயிலாடுதுறை,நவ.3: டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களை வாங்கும்போது எழும் தேவையற்ற புகார்களை தவிரக்கவும் நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவும் முறையில் மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே செலுத்திட வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 1.11.2026 முதல் ஒரு விற்பனையில் ரூ.1000/-க்கு மேல் மதுபாளம் வாங்குபவர்கள் மற்றும் 1.1.2027 முதல் ரூ.500/-க்கு மேல் மதுபானம் வாங்குபவர்கள் மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்திட முடியும். நுகர்வோர் எளிமையாக இணையவழி மதுபான முன்பதிவு முறையின் மூலமும் தொகையினை செலுத்தி கடைக்கு நேரில் வந்து மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம். நுகர்வோர்களின் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 18008892015 கலெக்டர் என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்தார்.


