Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஜெயங்கொண்டத்தில் பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் பல்வேறு அரசியல் கட்சி போஸ்டர்களால் மாணவர்கள் சிந்தனை பாதிப்பு; திருக்குறள், ஓவியம் வரைய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஜெயங்கொண்டம், நவ.2: ஜெயங்கொண்டத்தில் பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் தொடர்ந்து ஒட்டப்படும் அரசியல் கட்சிகளின் போஸ்டர் பதற்றத்தை உருவாக்கும் சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் அவ்வப்போது கடை விளம்பர போஸ்டர், சினிமா போஸ்டர், அரசியல் கட்சிகளின் போஸ்டர் உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இது கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கல்வித்துறை மற்றும் காவல் துறையில் கொடுத்த புகாரின் பேரில் அவ்வப்போது பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டரை அகற்றவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை ஒட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் சார்பில் கட்சித் தலைவரை வாழ்த்தி போஸ்டர் அடித்து பள்ளியின் காம்பவுண்ட் சுவர் முழுவதும் ஒட்டி உள்ளனர். அதே போல் பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இல்ல விழாவிற்கு அடிக்கப்பட்ட போஸ்டரை ஒட்டி இருப்பது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் பதற்றமான சூழல் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கு ஆர்வத்துடன் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்கு இவ்வகையான போஸ்டர் பார்க்கும்போது அவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் முழு கவனத்துடன் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு இல்லாத சூழலை அரசியல் கட்சியினர் ஏற்படுத்துகின்றனர். எனவே வருங்காலங்களில் பள்ளி காம்பவுண்டு சுவர்களில் எந்த விதமான போஸ்டரும் ஒட்டாத வகையிலும் பள்ளி மாணவர்களை படிப்பில் ஊக்கப்படுத்தும் வகையிலும் உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் பலவித கருப்பொருளில் ஓவியங்கள் வரைய வேண்டும் திருக்குறள் எழுத வேண்டும், எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1