Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக முதியோர் தினம் கொண்டாட்டம்

வேதாரண்யம், அக். 2: வேதாரண்யத்தில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். வேதாரண்யம் முதியோர் நல இயக்கத்தின் சார்பாக உலக முதியோர் தினம் கொண்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் முதியோர் நல இயக்கத்தின் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். பணியாளர் கண்ணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வேதாரண்யம், கோடியக்காடு, கடிநெல்வயல், நாலுவேதபதி, மனியன்தீவு, உள்ளிட்ட பல்வேறு பகுதிைய சேர்ந்த முதியவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி முதியோர் தினத்தை கொண்டாடினர். இதில் முதியவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்தும், முதியோர் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூட்ட முடிவில் அம்முனிதேவி நன்றி கூறினார்.