Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு நடவடிக்கை எடுக்காததால் சொந்த செலவில் பாசன வாய்க்கால் தூர் வாரும் ராதாரம்பூர் விவசாயிகள்

நாகப்பட்டினம், அக். 2: திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் ஊராட்சியில் கீழக்கட்டளை பாசன வாய்க்கால் தூர்வார சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் தங்களது சொந்த செலவில் வாய்க்கால் தூர்வாரி வருகின்றனர்.திருக்கண்ணபுரம் ஊராட்சி ராதாரம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், திருப்புகலூர் முடிகொண்டான் ஆற்றில் இருந்து திருக்கண்ணபுரம் ராதாரம்பூர் வழியாக வரும் கீழக்கட்டளை பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் பாசன வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வழக்கமாக கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், போராட்டத்தில் இறங்குவது இயல்பு. ஆனால் ராதாரம்பூர் கிராம விவசாயிகள் போராட்டத்தில் இறங்காமல் ‘‘மாத்தி யோசி’’ பாணியை கடைபிடித்தனர். பாசன வாய்க்கால் தூர் வாருவது தொடர்பாக அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் விளைவாக கீழக்கட்டளை பாசன வாய்க்காலை தாங்களாகவே தூர் வாரிட முடிவு செய்தனர்.