Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயக்காரன்புலத்தில் பொதுமக்கள் தூர்வாரிய பிள்ளையார் குளம்

வேதாரண்யம், ஜூன் 2: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலையில்அமைந்துள்ளது பிள்ளையார் கோவில் குளம். அரை ஏக்கரில் அமைந்துள்ள இந்த குளத்தினை நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த குளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தூர் வாராமல் செடிகள் மண்டி சேறும் சகதியாக காட்சியளித்தது. இதனால் பிள்ளையார் குளத்தை பொதுமக்கள் பங்களிப்போடு தூர் வார முடிவு செய்தனர். குளம் தூர் வாரும் பணியினை அமெரிக்காவில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஊரு திரும்பி தற்போது பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் ராம்குமார் ஒருங்கிணைத்து குளத்தை மீன் குத்தகைக்கு எடுத்து அதில் வரும் லாபத்தையும், பொதுமக்களின் பங்களிப்போடும் சுமார் 75 ஆயிரம் செலவு செய்து பொக்லைன் மற்றும் ஆட்களை வைத்து தூய்மைப்படுத்தி உள்ளார்.

ஊருக்கு பொதுவான குளத்தை தாமாக முன் வந்து தூர்வாரியதை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இவர் ஏற்கனவே பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தி தூய்மையாக வைத்துள்ளார். மேலும் பொங்கல் திருநாளன்று விளையாட்டு விழா நடத்துவது மற்றும் கோடை விடுமுறையில் இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடிபோன்ற பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரைப்போல் ஊருக்கு ஒரு இளைஞர்கள் குளத்தை எடுத்து தூர்வாரினால் நமது நீர்நிலைகளை பாதுகாக்கலாம் என்பதில் ஐயமில்லை.