அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவின்பேரில் திம்மாவரம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் ஆய்வு
இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையில் வருவாய்துறையினர், திம்மாவரம் பகுதியில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அரசுக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ள இடத்தையும், சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகளை மாற்று இடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் திட்டமியுள்ளனர். அந்த இடத்தில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் மக்கள் எப்படி அந்த இடத்தில் குடியிக்க முடியும் என அதிகாரிகளிடம் திம்மாவரம் பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். அரசுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான இடங்களை சில மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது சட்ட விரோதமான செயல், ஆக்கிரமிப்பு செய்துள்ள யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். ஆய்வுகளை சேகரித்த வட்டாட்சியர் பூங்குழலி, அனைத்த ஆவணங்களும் மாவட்ட கலெக்டரிடம் சமர்பிக்கப்பட்டு, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். ஆய்வின்போது காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்தேவி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.