மத உணர்வுகளை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது
நாமக்கல், ஜூலை 2: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா முத்துகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ்(29). பாஜ ஐடி விங்க் நிர்வாகியான இவர், தனது சங்கி பிரின்ஸ் என்ற எக்ஸ் தள பக்கத்தில், கடந்த 25ம் தேதி தனியார் டிவியில் ஒளிபரப்பான செய்தியை டேக் செய்து, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தாக்கி, மதக்கலவரம் ஏற்படுத்தும் வகையில் தகவல் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தினர். பின்னர், தலைமறைவாக இருந்த பிரவீன்ராஜை, போலீசார் நேற்று கைது செய்தனர். பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் கருத்துகளை வெளியிடக் கூடாது என நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.