Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, மே 28: மதுரை மாவட்டத்தில் 2026ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆண்களுக்கு நிகரான தைரியமான, வீரதீர செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்தமைக்காக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலை 2026ம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களின் வீரதீர செயல்கள், நிழற்படங்கள், விருதுகள் குறித்த உரிய விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.