Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

வாடிப்பட்டி, ஜூலை 18: மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி தேவநாதன் உத்திரவின்பேரில் தனிப்படை போலீசார் பரவை கொண்டமாரி பாலம் அருகே சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் சாக்குபையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்களை காவல்நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை சாந்தி நகரைச் சேர்ந்த ஹரீஷ் (23), கோச்சடை நடராஜ்நகரைச் சேர்ந்த தீனதயாளன் (25) என்பது தெரியவந்தது.

மேலும் இருவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் சமயநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.  அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.