Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டூவீலரை எரித்தவர் கைது

மதுரை, மே 16: மதுரை கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு முத்தையா கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (29). இவர் திருமணமான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெண்ணின் கணவர் வீட்டிற்கு தெரிந்து அவரை கண்டித்துள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த பாலாஜி அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரது டூவீலரையும் தீ வைத்து எரித்து விட்டார். இதுகுறித்த புகாரில் மாடக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.