Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உலக மக்கள் தொகை தினம் மாணவிகள் உறுதிமொழியேற்பு

மதுரை, ஜூலை 15: மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வழிகாட்டுதலின்படி, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உலக மக்கள் தொகை தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரப்பவும், ஆரோக்கியமான குடும்பம் மற்றும் பொறுப்பான குடிமக்கள் என்ற எண்ணத்தை வளர்க்கவும் அனைவரும் உறுதியேற்றனர்.