Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மதுரை, ஜூன் 13: மதுரை மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கமிஷனர் கவுரவ் குமார் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சியின் இரண்டாவது மண்டலத்திற்குட்பட்ட கே.கே.நகர் பிரதான சாலை, சுந்தரம் பூங்கா ரோடு, அப்பல்லோ சந்திப்பு, செல்லூர், மீனாம்பாள்புரம் மற்றும் நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கமிஷனர் கவுரவ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

சாலைகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இந்த ஆய்வின்போது மாநகர்நல அலுவலர் அர்விந்த் ஜோதி, உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.