திருமங்கலம், நவ.5: திருமங்கலம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தலைவர் ரம்யாமுத்துக்குமார் சீருடைகளை வழங்கினார். திருமங்கலம் நகராட்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி நகர் மன்ற அலுவலகத்தில் புதியதாக சீருடை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். இதில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கினார். இதே போல் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மெப்கோ தொழிற்சங்கத்தலைவர் முத்துக்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் நல்லுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சிக்கந்தர், வனஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


