Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

2 ஆயிரம் பனை விதைகள் நடவு

மதுரை, நவ.5: மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கண்மாய்கள், ஊருணிகளை பாதுகாக்கும் விதமாக பனைவிதைகள் நடவு செய்யப்படுவது வழக்கம். இதன்படி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுதாமரைபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஊருணியில் நேற்று, சங்கத்தின் செயலாளர் செல்லம், கொடிக்குளம் பிட் 2 கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், ஊராட்சி செயலாளர் வீரணன் மற்றும் பொதுமக்கள் இணைந்து 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்தனர். நடவு செய்யப்பட்டுள்ள பனைவிதைகளை முறையாக பராமரித்து வளர்க்க கிராம பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.