மதுரை, நவ. 4: மதுரையின் 38 முக்கிய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான முன்மொழிவு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு சுற்றுலாத்துறை அனுப்பி வைத்தும் நிர்வாகம் மற்றும் நிதி ஒப்புதல் வழங்காமல் மாநில அரசு இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகரம் சரித்திர சிறப்புடன், ஆன்மிக மேன்மை கொண்டது. பிரதானமாக மீனாட்சியம்மன் கோயிலை முன்னிறுத்திய இந்த பக்தி நகரத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தன. நக்கீரர் முதல் அத்தனை தமிழ் புலவர்களையும் தந்த பெருமை கொண்டது. உயர்ந்த கோபுரங்கள், உயிரோட்டமிக்க சிற்பங்களுடன் மீனாட்சி கோயில் காண்போரை வாய் பிளக்க வைக்கிறது.


