Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சோழவந்தான் அருகே தாய், மகள் தற்கொலை

சோழவந்தான், நவ. 4: சோழவந்தானை அருகே விக்கிரமங்கலம் மலையூரை சேர்ந்த சுந்தரபாண்டி மனைவி சுந்தரவள்ளி (35). இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி 18 வயதில் மகனும், வினிதா (16) என்ற மகளும் உள்ளனர். சுந்தரபாண்டி-சுந்தரவள்ளி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய வினிதா, தாயுடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். மகன் வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஊரருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் சுந்தரவள்ளி, வினிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் ராதிகா, எஸ்ஐ பாண்டி, போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.