Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விலைவாசி உயர்வுக்கு கண்டனம்

மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சாமி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் முருகன், சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, வீரணசிங்கம், பாலமுருகன் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வு குறித்து அமைச்சர்களின் முன்னுக்குபின் முரணான தகவல்களை அரசு கண்டிக்க வேண்டும், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் உணவு பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.