Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டூவீலர் திருடிய வாலிபர் கைது

மதுரை, ஜூன் 4: மதுரை, புதுஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(44). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தனது டூவீலரில் சென்றுள்ளார். பின்னர் கடை முன்பாக வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்குவதற்காக உள்ளே சென்றார். பின்னர் கடையில் இருந்து 10 நிமிடங்களில் அவர் திரும்பி வந்தபோது, டூவீலர் திருடுபோனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த துணிகர திருட்டு குறித்து கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வெங்கடேசின் டூவீலரை திருடிச்சென்ற சிவகங்கை மாவட்டம் படமாத்தூரை சேர்ந்த பிரபாகரன்(27) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து டூவீலரும் கைப்பற்றப்பட்டது.