ஆணவ கொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 1: திருநெல்வேலியில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து, மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜினியர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகார கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மக்கள் கலை இலக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில், கவின் கொலையை கண்டித்தும், ஆணவ கொலையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை முற்றிலும் தடுப்பதற்கான சட்டம் இயற்றக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.