மதுரை, ஜூன் 26: மதுரை அரசரடி பகுதியில் உள்ள மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மதுரை பெருநகர் வட்டம், மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமை வகித்தார். மின்வாரிய செயற்பொறியாளர் லதா, உதவி செயற்பொறியாளர்கள், மின்பொறியாளர்கள், வருவாய் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மின்சார மீட்டரை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும், வீட்டிற்கு அருகாமையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை, உயர்மின் அழுத்த, குறைந்த மின் அழுத்தம் வேறுபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மேற்கு கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களிடம் இருந்த மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார்.
