Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 23: டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மற்றும் நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மதுரை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜென்னியம்மாள் தொடக்க உரையாற்றினார். மாநகராட்சி பொறுப்பு மேயர் நகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.