திருமங்கலம், டிச. 7: திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி அருகே கவுண்டமா நதியில், நேற்று சிலர் அனுமதியின்றி மண் அள்ளுவதாக விஏஓ குருசாமிக்கு தகவல் வந்தது. அவர் சென்றபோது பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மூன்று பேர் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கான அனுமதிச்சீட்டு அவர்களிடம் இல்லை. இதுதொடர்பாக, திருமங்கலம் தாலுகா போலீசில் விஏஓ புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராவல் மண் அள்ளிய ஆலம்பட்டியை சேர்ந்த ஜான் வில்லியம், வெங்கடேஷ் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


