Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

125 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

உசிலம்பட்டி, ஜூலை 31: மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கூறுகையில், 125 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கக்கோரி அரசாணை வெளியிட்டும் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட ஒன்றியங்களில் பணி வழங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என தெரிவித்தனர்.