Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

4 பேருக்கு குண்டாஸ்

மதுரை, ஜூலை 31: மதுரை பழங்காநத்தம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சத்யராஜ்(27). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண்குமார் (24), மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (24), ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (20). இவர்கள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் நிலைய கொலை குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்கள் தொடர்ந்து கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டு,

பொதுமக்களின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி தேவநாதன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.