Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை வாங்க மறுத்து போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்

மதுரை, ஜூன் 30: மதுரை அருகே கல்புளிச்சான்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் சித்திக்(24). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விக்கிரமங்கலம் - செக்கானனூரணி ரோட்டில் உள்ள உண்டாங்கல் மலை குளத்துப்பட்டி பிரிவு அருகே சித்திக் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். விக்கிரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கொலையான சித்திக் மற்றும் அவரது அண்ணன் சித்தார்த்(28) ஆகியோர், 2024 மார்ச்சில் மேலக்கால் கிராமத்தில் உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு சென்றிருந்தனர்.

அப்போது, திருமங்கலம் செங்குளம் பகுதியை சேர்ந்த முத்தையா(23) என்பவருடன் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கல்புளிச்சான்பட்டி அருகே மூவரும் ஒன்றாக மது அருந்தியபோது, மீண்டும் அவர்களுக்ளு் மோதல் உருவானது. இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இணைந்து, முத்தையாவை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. இச்சம்பவத்தில் இருவரும் கைதான நிலையில், சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ளனர். இந்நிலையில்தான் முத்தையா கொலைக்கு பழிக்குப்பழியாக சித்திக் கொலை நடந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையில் சித்திக் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலைக்குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் விக்கிரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் உறவினர்கள் சித்திக் உடலை பெற்றுச் சென்று இறுதிச்சடங்கு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.