Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சாமி, புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல், ஏஐடியுசியின் மாநில பொதுசெயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை திரும்பப்பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக நிறைவேற்றியுள்ள நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்.

விபிஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். மதுரை உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மை பணிகளை, தமிழக அரசு தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் எவ்வித பாகுபாடும் இன்றி விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.