Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காலாவதி ‘கேக்’ விற்பனை

மதுரை, ஜூன் 30: மதுரை நேருநகர் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவர், அவரது மகனுடன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கேக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு ‘மௌஸ்’ வகை கேக் பார்சல் வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட்ட போது அது, ெகட்டுப்போனது தெரியவந்தது. இதன்படி அந்த கேக் தயாரிப்பு தேதியை பார்த்ததில், காலாவதியாகி 10 நாட்களுக்கு பிறகு அதனை விற்பனை செய்தது உறுதியானது. இதுகுறித்து அவர் அந்த கடையில் புகார் அளித்ததுடன், தனது பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.

பின்னர் காலாவதியான கேக் விற்பனை செய்ததாக போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரிடம் சுல்தான் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்எஸ் காலனி போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து கேக் கடைக்கு வந்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கடைக்குள் தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். பிரபல விற்பனை மையத்தில் காலாவதி கேக் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது