அலங்காநல்லூர், ஆக. 29: அலங்காநல்லூர் அருகேயுள்ள கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (41). கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனை பிரிந்த அப்பெண் கடந்த 3 மாதங்களாக மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்த சோகத்தில் மாரிமுத்து கடந்த 15 நாட்களாக அதிகமாக மது அருந்தியபடியே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாரிமுத்து அவரது வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



